INNOVATIONS


© அருண் நரசிம்மன் | மூலம் ~ 2013 | கடைசி மாற்றம்: ஜூன், 2016
URL: https://home.iitm.ac.in/arunn/cnr-rao.html

பாரத ரத்னா சி. என். ஆர். ராவ்
அருண் நரசிம்மன்
பகுப்பு: அறிவியல் | கட்டுரைகள்
உலகே உன் உருவம் என்ன?  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான சின். என். ஆர். ராவ்விற்கு 2013இல் வழங்கப்பட்டது. கூடவே சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப் பட்டது.
இணைய கவனக்கலைப்புகளில் திளைத்து வாசிப்பதை விட்டு மேய்பவர்களுக்கு ஒரு விஷயம்: சி. என். ஆர். ராவ் சமீபகால மாய் தன் மேஜையில் இருந்த கணினியையும் அகற்றி விட்டாராம், கவனக்கலைப்பு என்று. (செல்பேசியை மனைவி யுடன் பேசுவதற்கு மட்டுமே உபயோகிக்கிறார். வரும் மின் அஞ்சல்களையெல்லாம் காரியதரிசி மூலம் அறிந்து தேவை யானவற்றுக்குப் பதிலளித்துவிடுவாராம்.)
ராவ் இந்திய அரசாங்கத்துடன் பல்வேறு அறிவியல் சார்ந்த குழுக்களிலும் திட்டங்களிலும் தொடர்ந்து பணியாற்றியவர். பட்டியல் வெகு நீளம். பிரதம மந்திரியின் பிரதான அறிவியல்-ஆலோசனைக் குழுவின் தலைமைப்பொறுப்பில் (நான்கு பிரதம மந்திரிகளின் பதவிக்காலங்களை அடக்கிய கால வரை யறையில்) செயலாற்றியுள்ளார். ராவ் இந்திய அறிவியல், அறிவி யலாளர்களின் மேல் மிகுந்த பற்றும் அதிகார சக்தியும் உள்ளவர். இச்செயல்பாடுகளில், இவர் கீழிருக்கும் அல்லது சக விஞ்ஞானிகள் சிலருக்கு மூச்சு முட்டியுள்ளது. நேரடியாகவும் உட்பூசல்களாகவும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்துள் ளன. இக்கட்டுரையில் இவற்றைத் தவிர்க்கிறேன். ஆய்வு களும், சார்ந்த ஓரிரு சர்ச்சைகளுமே இக்கட்டுரை யின் உள்ளடக்கம்.
சச்சின் நம் அனைவரின் ‘டார்லிங்’. நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து நேற்று (நம்பர் 16, 2013) ஓய்வுபெற்றார். ஒரு சாம்பியனின் வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு தியா கங்கள் எவ்வெவரிடமிருந்தெல்லாம் தேவை என்பதை உணர்த் தும் வகையில் பெற்றோர் முதல் பெருந்திரள் ரசிகர்கள் வரை அரவணைத்த அருமையான நன்றியுரையுடன் விடை பெற்றார். வருங்காலத்திற்கு கிரிக்கெட்டில் எட்டக்கூடிய சாதனைகள் எவை என்பதை நிறுவியதோடு அவற்றைச் சென்றடைய வேண்டிய வாழ்க்கைப்பாதையையும் இளைய சமுதாயத்திற்கு உணர்த்தியுள்ளார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பாரத ரத்னா.
சின். என். ஆர். ராவ் (சிந்தாமணி நாகேஸ ராமச்சந்திர ராவ்) எண்பது வயதை நெருங்கும் அறிவியல் இளைஞர். இன்னமும் ரிடையர் ஆகவில்லை. வேதியியல் விற்பன்னர். மிக முக்கி யமாக, இந்தியாவிலிருந்தபடியே, இங்கிருக்கும் வசதிகளை வைத்துக்கொண்டே, பெருஞ்சாதனை செய்து காட்டியவர். விஞ்ஞானம்-தொழில்நுட்பம் துறைகளில் சி. வி. ராமன் (1954), விஸ்வேஸ்வரய்யா (1955), அப்துல் கலாம் (1997) வரிசையில், பாரத ரத்னா பெறும் நான்காவது நபர்.
சச்சின், ராவ் இருவருக்கும் சில ஒற்றுமைகளைக் குறிப்பி டலாம். தங்கள் துறையில் நம்பிக்கையானவர்கள். இளவயதி லேயே நட்சத்திரங்களாய் அறியப்பட்டவர்கள். தொழிலை, துறையை மிகவும் விரும்பித் தேர்வு செய்துகொண்டவர்கள். நெடுங்காலம், சராசரிக்கும் உயர்ந்த தரத்தில் பணியாற்றிய வர்கள். செயலாற்றும் விதத்தில் இன்றளவிலும் வெளிப்படும் குழந்தை போன்ற உற்சாகத்தில் பலரைத் தம் துறைபால் ஈர்த்தவர்கள். ஒருவர் டெஸ்ட், ஒரு-நாள், டுவெண்டி-டுவெண்டி என்று கிட்டத்தட்ட எழுநூறு போட்டிகளுக்குமேல் பங்குபெற் றவர் என்றால் அடுத்தவர் திட-வேதியியல், நேனோ-அறிவியல் துறைகளில் ஆயிரத்தைந் நூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்றால், அடுத்தவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான முறை சக ஆராய்ச்சியாளர்களால் சுட்டப்பட்டுள்ளன. இருவரும் இல்லறத்தில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்கள். சச்சின் தன் நன்றியுரையில் மனைவியின் உறுதுணையை ‘என்னுடைய பெஸ்ட் பார்ட்னர்ஷிப்’ என்று சிலேடையாகச் சொன்னார். ராவ் தன் மனைவியுடன் சமையல் செய்வது பொழுதுபோக்கு என்கிறார். இன்றுவரை குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு மனைவியுடன் சேர்ந்து உழைக்கிறார். ராவ் இவ்வகையில் அளித்த ஒரு உரையை சில வருடங்கள் முன் நேர்முகமாய் கேட்டிருக்கிறேன். உரையின் முடிவில் நிகழ்ந்த ஹலோ-கைகுலுக்கல்களில் என் குரலும் கையும் இருந்தது.
சச்சின் சாதனைகள் பற்றிய தகவல்கள் நமக்கு பரிச்சயமே. இணையம் முதல் குமரிவரை அவற்றை எங்கு பெறுவது என்றும் தெரியும். சின். என். ஆர். ராவ் பற்றிய சில தகவல்களை இங்கு சற்றே தெரிந்துகொள்வோம்.
ராவ் தற்போது ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 1950களில் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, பிறகு சில வருடம் பெர்க்லி கலிஃபோர்னியாவிலுள்ள பிரசித்திபெற்ற பல்கலைக்கழகத் தில் பின்-முனைவர் தகுதியில், நவீன வேதியியலின் தந்தை என்று கருதப்படும் ஜி. என். லூயிஸ் உடன் சில ஆய்வுகளை            இல் இந்திய அறிவியல் கழகத்தில் விரிவுரையாளராக ஐநூறு ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். பிறகு அப்போது தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி. கான்பூரில் இணைப்பேரா சிரியராகச் சேர்ந்தார். 1976இல் மீண்டும் இந்திய அறிவியல் கழகம். இப்படித் திக்கித்திக்கித் தொடங்கிய இந்திய ஆராய்ச்சி வாழ்க்கையில் ராவ் பல இலக்குகளை எட்டியுள்ளார்.
ராவ் நேனோ அறிவியலை இந்தியாவிற்கு கொண்டுவந்த முன்னோடி. அன்றாட அறைச் சூட்டில் நிகழும் (அதிகடத்திகள் அல்லது) மீகடத்திகளைப் (ரூம் டெம்ரேச்சர் சூப்பர்-கண்டக்டி விட்டி) பற்றிய இந்திய ஆராய்ச்சிகளை உலகத்தரத்திற்கு எடுத் துச்சென்றவர். ஐம்பதுகளில் தொடங்கி இன்றுவரை பல பத்தாண்டுகளில் வேதியியலில் உதிக்கும் புதிய ஆராய்ச்சிக் கருத்தாக்கங்களை ஒட்டிய ஆராய்ச்சிகளை இந்தியாவில் முதன்மையாக நிகழ்த்திக்காட்டியவர். பென்ஸீன் வேதியியலில் ஆய்வுகளைத் தொடங்கியவர், 1968 வாக்கில் அ-கரிம வேதியி யலுக்கும், திடப்பொருள் வேதியியலுக்கும் மாறினார். கோர்-ஷெல் கட்டாலிஸிஸ், அ-கரிம கரிம இரசாயன மாற்றங்கள், அறை-வெப்ப மீ-கடத்திகள், நேனோ-துகள்கள், நேனோ-குழாய்கள், கார்பன் நேனோ குழாய்கள், கிராஃபீன் பொருளின் தன்மைகள், கிராஃபீன் ரிப்பன்கள், குவாண்டம் பொட்டுகள், லித்தியம் பாட்டரிகள், டெம்ப்ளேட் சிந்தஸிஸ்... ராவ் ஆராய்ந்த இவையனைத்துமே வேதியியலில் வெவ்வேறு காலகட்டங் களில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட கருத்தாக்கங்கள்.
ஒரு ஆய்வைப்பற்றி சற்றே விரிவாக. மீ-கடத்திகள் (சூப்பர் கண்டக்டர்கள்) செய்வது பற்றிய ஆராய்ச்சி, 1911இல் கேமர்லிங் ஓனஸ் முதலில் மீ-கடத்தும் விளைவைக் கண்டறிந்ததில் தொடங்கியது. கம்பிகளில் மின்சாரம் கடக்கையில், கம்பி செய்யப்பட்ட பொருளுக்கேற்றவகையில் இக்கடத்தலுக்கு ‘எதிர்ப்பு’ கிளம்பி, சிறிதளவேனும் மின்சாரம் வெப்பமாய் விரயமாகும். இது அன்றாட மின்சாரக்கம்பிகளில் இன்றளவும் நிகழ்கிறது. சில பொருள்களைக் குளிர வைக்கையில், இந்த ‘எதிர்ப்பும்’ குறையும் என்று ஓனஸ் கண்டுபிடித்தார். இதனால், இவ்வெதிர்ப்பே இல்லாத பொருள் இழப்பின்றி மின்சாரம் கடத்தும் ‘மீ-கடத்தி’ ஆகிறது. இவ்வகைப் பொருட்கள் பொது வாக மிகுந்த குளிரடிக்கும் மைனஸ் வெப்பநிலைகளிலேயே விளைவைக் காட்டி. இயற்பியலையும் வேதியியலையும் இணைக்கும் இத்துறையின் ஆராய்ச்சிகள் தினம் (மின்சாரக் கம்பிகள் போல) பயன்படும்விதமாய் மீகடத்திகளை அறை வெப்பநிலையில் தயாரிப்பதின் சவால்களை எதிர்கொள்கிறது. இன்னமும் முழு வெற்றியில்லை. வேடிக்கையாய், மிகக்குளிரி லிருந்து சற்றே சூடான ஆனால் (23 கெல்வின் போன்ற) ‘மைனஸ் வெப்பநிலைகளில்’ இவ்விளைவைக் காட்டும் பொருட்களை ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ என்கிறோம்.
டிசம்பர் 1986இல் இயற்பியல் துறையில் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ துறையில் புதிய கண்டுபிடிப்பு. அப்புதிய பொருள் 23 கெல்வினையும் கடந்து சூடான 35 கெல்வின் வெப்ப நிலையிலும் மீ-கடத்தும் குணத்தை வெளிப்படுத்தியது. ராவ் இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. ஆண்டர்ஸன்னை இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஒரு மாநாட்டில் ராவ் சந்திக்கிறார். ராவ்வின் உரைக்குப் பிறகு ஆண்டர்ஸன் அவரிடம் இப் பொருள் பற்றிக் கேட்கிறார். ராவ் ‘எனக்கு இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது பற்றித் தெரியாதே’ என்கிறார். ஆண்டர்ஸன் அப்பொருள் லாந்த்தானம், தாமிரம் ஆகிய மூலப்பொருள் களின் ஆக்ஸைடுகளினால் ஆனது என்கிறார். ராவ்விற்கு பொறி தட்டுகிறது. அப்பொருள் லாந்த்தானம் காப்பர் ஆக்ஸைடு (LaCuO4) தானே? ஆமோதிக்கிறார் ஆண்டர்ஸன். தான் பல வருடங்கள் முன்னரே (1971இலேயே கங்குலியுடன் எழுதிய ஆய்வுக்கட்டுரையைக் குறிப்பிட்டு) இப்பொருளைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டிருப்பதை ஆண்டர்ஸனிடம் தெரி விக்கிறார் ராவ். அடுத்த இரண்டு மணிநேரங்கள் இருவரும் சோதனைச் சாலையில் இக்கூற்றை மெய்பிக்கும் ராவ்வின் ஆய்வுக் கட்டுரைகளைப் பரிசீலிக்கின்றனர். ஏற்கெனவே ராவ் La2CuO4 எவ்வாறு ஃபெர்ரோ-மாக்னடிஸம் குணத்தை எதிர்க்க வல்லது என்பதை நிறுவியுள்ளது தெரிகிறது. இக்குணம் அனைத்து மீ-கடத்திகளிலும் தேவை.
எவ்வாறு தான் ‘உயர்-வெப்பநிலை மீகடத்திகள்’ ஆய்வில் பங்களிக்கலாம் என்று ராவ் கவலையுறுகிறார். அவர் சுயசரிதை யின்படி ‘பல தூக்கமில்லா இரவுகள்’ சோதனைச் சாலையில் கழிகின்றன. இரண்டு மாதங்களில் உலகின் முதல் திரவ-நைட்ரஜன் கொண்டு இயங்கும் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்தி’ கண்டறியப்படுகிறது. அதுவரை மீகடத்திகளைச் செய்வதற்குத் திரவநிலை ஹீலியம் தேவைப்பட்டது. ராவ் கண்டறிந்த புதிய வேதியியல் காம்பவுண்டு YBa2Cu3O7 யிட்ரியம், பேரியம், தாமிரம் ஆக்ஸைடுகளால் ஆனது. இதை ‘123 காம்பௌண்ட்’ என்றழைப்பார்கள். தொண்ணூறு கெல்வின் (90K) வெப்ப நிலையில் இயங்கிய முதல் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்தி’ (ஆனால், இதுவும் அறை வெப்ப நிலையில் செயல்படாது). தனிப்பட்ட ஆய்வில், ராவ்வின் சோதனைச்சாலையில், பெங்க ளூரில் கண்டறியப்ப

No comments:

Post a Comment